ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு சுவையான வாழைக்காய் ரோஸ்ட்
ஒரு பெரிய சைஸ் வாழைக்காயை தோலைச்சீவி குறுக்கு வாக்கில் நீளமாக சிலைஸ்களாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பவுலில் வாழைக்காய் சிலைஸ்கள், ஒரு எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
ஒரு கப் தயிரை விஸ்க் மூலம் நன்றாக அடிக்கவும். அதில், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை ஊறுகாயை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதன் மீது சீரகத்தூளை தூவினால் தொட்டுக்கொள்ள சைடு டிஷ் டிப் ரெடி.
அரிசி மாவு - 4 டீஸ்பூன், மிளகாய் தூள்- 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 3/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன், தனியா தூள் - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன், சிறிதளவு உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதில், தண்ணீர் சேர்க்கக்கூடாது. ஏற்கனவே ஊறவைத்த வாழைக்காயில் உப்பு சேர்த்திருப்பதால் இந்த மசாலா கலவையில் சிறிதளவு உப்பு சேர்த்தாலே போதுமானது.
ஊறவைத்த வாழைக்காய் துண்டுகளை இந்த மசாலாக் கலவையில் இருபுறமும் நன்றாகப் பிரட்டி தனியே எடுத்து வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி வாழைக்காய் சிலைஸ்களை போடவும். இருபுறமும் திருப்பிப் போட்டு முறுகலாக வேக வைத்தால், சுவையான, ஆரோக்கியமான வாழைக்காய் ரோஸ்ட் ரெடி.