மழைக்காலத்தில் வரும் சளி, இருமலை போக்கும் மருந்து குழம்பு!
மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி சளி , இருமல், தொண்டை கரகரப்பு ஏற்படும். அவற்றை மட்டுமல்லாமல் உடல் அசதியை போக்கும் மருந்து குழம்பு ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்: முடக்கத்தான், துாதுவளை, முசுமுசுக்கை கீரை - தலா 1 கப், தேங்காய் துருவல் - 1 கப், பூண்டு - 1, எண்ணெய், புளிக்கரைசல் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயை சூடாக்கி, பூண்டு பற்களை நன்றாக வதக்கவும்.
பின், சுத்தமாக்கிய முடக்கத்தான், துாதுவளை, முசுமுசுக்கை கீரையை விழுதாக அரைத்து போட்டு வதக்கி, புளி கரைசலை ஊற்றவும்.
கொதித்து எண்ணெய் பிரிந்ததும், நன்றாக அரைத்த தேங்காயைச் சேர்க்கவும்.
அடுப்பு வெப்பத்தை குறைத்து சற்று நேரத்துக்கு பின் இறக்கவும். சுவையான, 'மருந்து குழம்பு' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
வாரம் ஒருமுறை உண்டால், சளி அண்டாது, உடல் வலி, கை, கால் வலி மற்றும் அசதி குறையும். சுறுசுறுப்பாக இயங்கலாம்.