சூடான சாதம், குளிர்ந்த தயிர் கலந்து சாப்பிட்டால் உண்டாகும் ஆபத்து..!

அலுவலகம் செல்லும் பலரும் அவசர சமையலுக்கு அதிகம் சிந்திக்கும் எளிய மெனு என்றால் அது மோர் சாதம், ஊறுகாய்தான்.

குறிப்பாக குக்கரில் விசில் வந்தவுடனே, ஆவி இறங்கும் முன்னரே அவசர அவசரமாக சாதத்தை எடுத்து, அப்படியே அதில் குளிர்ச்சியான மோர், தயிர் ஊற்றி கலந்து சாப்பிடுவர்.

சூடான ஒரு உணவுப் பொருளுடன் குளிர்ச்சியான உணவுப்பொருள் சேரும்போது, பலவித உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக சூடான சாதத்தில் குளிர்ந்த மோர் சேர்த்தால் சூடு உடனே தணியாது.

இதனை அப்படியே சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வாயுப் பிடிப்பு, வாந்தி, பேதி ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே எப்போதும் சூடு தணிந்த பின்னரே அதில் குளிர்ந்த பால், மோர், தயிர் ஆகியவற்றைக் கலக்க வேண்டும்.

அதாவது, குக்கரில் தயாரான சூடான சாதத்தை முழுவதுமாக ஆவி அடங்கிய பின்னர் வெளியே எடுக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் நன்றாக ஆறியபின், தேவையானளவு மோர், தயிர் சேர்த்து பிசையலாம்.