பனங்கற்கண்டின் ஆரோக்கிய நன்மைகள்
வைட்டமின், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம் மற்றும் அமினோ அமிலங்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்தது பனங்கற்கண்டு.
இது குளிர் காலங்களில் ஜலதோஷத்தால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, நெஞ்சுச்சளி, இருமலை போக்கும். வாத பித்தம் நீங்கும், பசியை துாண்டும்.
பாதாம் பருப்பு- 2, பனங்கற்கண்டு- 1 டே.ஸ்பூன், மிளகுத்துாள்- 0.5 டீஸ்பூன் சேர்த்து, மிக்சியில் பொடித்து, பாலுடன் கலந்து, வாரம் இருமுறை குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மிளகு துாள், நெய் மற்றும் பனங்கற்கண்டு தலா அரை தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டால், தொண்டை வலி மற்றும் தொண்டைக் கட்டு குணமாகும்.
சிறிது சீரகம், பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.
இதில் இரும்புச் சத்து அதிகமுள்ளதால், ரத்த சோகை பிரச்னைக்கு நிவாரணம் தரும்.
சிறிதளவு பசு நெய், பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட, உடல் சோர்வை நீக்கி, சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.
சிறிதளவு வெங்காய சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து, வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
கர்ப்பிணி மற்றும் மகப்பேறு பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்றுப் புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
இதில் நிறைந்துள்ள கால்சியம், எலும்பு சிதைவு, முழங்கால் வலி மற்றும் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது.