உடலில் கால்சியத்தை அதிகரிக்க பாதாமை இப்படியும் சாப்பிடலாம்
பாதாம் பால்... நன்றாக ஊற வைத்த பாதாமை அரைத்து பாலாக உட்கொள்ளலாம்.
ஓட்ஸ் அல்லது கஞ்சியில் நறுக்கப்பட்ட பாதாம் பருப்புகளை சேர்த்து உட்கொள்ளும்போது, கூடுதல் சுவை மட்டுமின்றி கால்சியம் சத்தும் பெறலாம்.
ஸ்மூத்திகளில் பாதாம் அல்லது பட்டர் பாதாமை சேர்த்து உட்கொள்ளலாம்.
பாதாம் பால் புட்டிங் அல்லது பாதாம் அடிப்படையிலான எனர்ஜி இனிப்பு வகைகளை தயாரிக்கலாம்.
பழ சாலட்டுகளில் நறுக்கிய பாதாம்களை சேர்க்கலாம்.
பாதாமில் தாதுக்கள், புரதம், அமினோ அமிலம், வைட்டமின் பி, மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
தினமும் நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவதால், 8 முதல் 12 சதவீதம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைகிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.