பழைய வெல்லமும், புதிய வெல்லமும்
அந்தந்த ஆண்டு விளைந்த புதிய அரிசியை விடவும், பழைய அரிசியை பயன்படுத்துவது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது போன்றது தான் வெல்லமும்.
மேலும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துவது நல்லது.
அதிலும், புதிய வெல்லத்தை விடவும் பழைய வெல்லம் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது; மருத்துவ குணமும் நிறைந்தது.
பழைய வெல்லம் சாப்பிட்டால் உடல் பலம் அதிகரிக்கும்; பசியைத் துாண்டும்.
பழைய வெல்லத்தை சுக்குடன் சேர்த்து சாப்பிடும் போது உடல் வலி குறையும்.
அதனுடன் இஞ்சியுடன் சேர்த்து சாப்பிட்டால் சளி குறையும்.
அதே பழைய வெல்லத்தை கடுக்காயுடன் சேர்த்து சாப்பிடும் போது, உடம்பில் உள்ள பித்தம் குறையும்.