ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாலக் பூரி

தேவையானப் பொருட்கள்: கோதுமை மாவு - 250 கிராம், பச்சை மிளகாய் - 5, பாலக்கீரை - 3 கட்டு, சீரகம் - தேவையானளவு.

கொத்துமல்லி - ஒரு கைப்பிடி, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பூரி பொறிக்க தேவையானளவு.

பாலக்கீரையை ஆய்ந்து, உப்பு போட்டு நன்றாக கழுவி, தனியே வேக வைக்கவும்.

சூடு ஆறிய பின் நீரை வடித்து விட்டு, அதில், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், கொத்துமல்லியை சேர்த்து, மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் அரைத்து வைத்துள்ள கீரை விழுதை சேர்த்து, தேவையானளவு உப்பு போட்டு மாவு பதத்துக்கு பிசையவும்.

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், போட்டு பொறித்தெடுத்தால், பாலக் பூரி ரெடி.

குழந்தைகளுக்கு பள்ளிக்கு லன்ச் ஆக கொடுத்தனுப்பலாம். மாலை நேர டிபனுக்கும் ஏற்றது.