குட்டீஸ்களுக்கு பிடித்தமான உருளைக்கிழங்கு உருண்டை ரெசிபி
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 2, பச்சை மிளகாய் - 4, மக்காசோள மாவு - 2 டேபிள் ஸ்பூன், வெள்ளை ரவை - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, எண்ணெய், உப்பு, கொத்தமல்லி இலை மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.
உருளைக்கிழங்கை, நீரில் வேக வைத்து தோலுரிக்கவும்.
அதனுடன், பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலை, வெள்ளை ரவை, அரைத்த இஞ்சி, மக்காசோள மாவு, உப்பு சேர்த்து பிசையவும்.
அதை சிறிய உருண்டைகளாக பிடித்து, அப்படியேவோ அல்லது சிறிதளவு தட்டியோ எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு உருண்டை ரெடி.
குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.