துளசி தண்ணீரை தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா!!
துளசியின் இலைகள், தண்டுகள், பூக்கள், வேர்கள் மற்றும் விதைகள் மருத்துவ குணம் கொண்டவை.
தினமும் வெறும் வயிற்றில் துளசி நீரை குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய் முதல் சிறுநீரகக் கோளாறு வரை அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்
சிறிது துளசி இலைகள் அல்லது விதைகளை எடுத்து வெந்நீரில் போடவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் தினமும் குடிக்கவும்.
சளி, இருமல், தொண்டை வலி போன்றவை தீரும். இது சுவாச பிரச்னைகளை குறைக்கிறது. சளி அதிகமாக சுரப்பதை தடுக்கிறது. தொண்டை வலியையும் குறைக்கிறது.
துளசி இலையில் நீரிழிவு நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. துளசி ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க உதவுகிறது.
துளசியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் தோல் நோய்களைக் குறைக்க உதவுகிறது.
துளசி இலையில் பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. துளசி இலையை சாற்றை தினமும் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
பூஞ்சை தொற்று ஏற்படும் போது துளசி சாற்றை காயங்களின் மீது தடவுவது மிகவும் நன்மை பயக்கும்.