திறந்த வெளியில் இறைச்சியா? 4 மணி நேரத்தில் கெட்டு விடும்!

ஆடு, மாடு உள்ளிட்ட இறைச்சிகளை திறந்த வெளியில் வைத்திருந்தால், 12 மணி நேரம் வரை தாங்கும்; கெட்டுப்போகாது என்பது தவறானது என, கால்நடை டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.

வியாபாரிகள் தண்ணீர் தெளித்து, இறைச்சி ஈரத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதால், 12 மணி நேரம் வரை நல்ல இறைச்சி என்று நினைக்கின்றனர்.

ஆனால், நான்கு மணி நேரம் மட்டுமே இறைச்சி தாங்கும். அதன்பின், நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகரித்து கெட்டு விடும்.

எனவே, இறைச்சியை, 24 மணி நேரத்திற்குள் விற்பனை எனில், 0 டிகிரி குளிர்நிலையிலும்; அதற்கு மேற்பட்ட நாட்கள் என்றால், மைனஸ் 18 டிகிரி உறைநிலையிலும் வைத்து, வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும்.

நுண்ணுயிர்கள் நிறைந்த இறைச்சியை, 72 டிகிரி வெப்பநிலையில் வேக வைத்து சாப்பிட்டாலும், உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

அத்தகைய இறைச்சியை என்ன தான் அதிக வெப்பநிலையில் சமைத்து சாப்பிட்டாலும், உடல்நல பாதிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது