தீபாவளி ஸ்பெஷல்... பொட்டுக்கடலை பட்டர் முறுக்கு
தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - 2 கப், பொட்டுக்கடலை - 1 கப், பெருங்காயத்துாள் - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், தண்ணீர், உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.
பொட்டுக் கடலையை வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.
இதனுடன் அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம், சீரகம், எள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
பின், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, மாவு பதத்திற்கு பிசையவும்.
இம்மாவை முறுக்கு நாழியில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
இப்போது மொறுமொறு பொட்டுக்கடலை பட்டர் முறுக்கு ரெடி. குட்டீஸ்கள் விரும்பிச் சாப்பிடுவர்.