வெயிலுக்கு இதமான இளநீர் ஷேக்
தேவையானப் பொருட்கள்: இளநீர் : 2, முந்திரிப்பருப்பு : 5 - 10, சர்க்கரை : 3 டேபிள் ஸ்பூன், ஐஸ்கட்டிகள் : தேவையான அளவு, பாதாம் : 5, பிஸ்தா : 5
இளநீரில் வழுக்கையை தனியே எடுத்து வைக்கவும்; நன்றாக வழுக்கையாக இருக்க வேண்டும்.
இதில், முந்திரிப்பருப்பு, சர்க்கரை மற்றும் தேவையான அளவு இளநீர் தண்ணீரை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து மீண்டும் சிறிதளவு இளநீர் தண்ணீர் மற்றும் ஐஸ்கட்டிகளை சேர்த்து அரைக்கவும். இப்போது இளநீர் ஷேக் ரெடி.
இதை டம்ளர் அல்லது கப்பில் ஊற்றி, குளிர்ச்சிக்கு தேவையான அளவு ஒரு சில ஐஸ்கட்டிகள், சிறிது சிறிதாக 'கட்' செய்த பாதாம், பிஸ்தாக்களை தூவி பரிமாறவும்.
இனிப்புச் சுவைக்கேற்ப சர்க்கரையை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.
மிக்சியில் அரைக்கும் போது நன்றாக காய்ச்சி ஆற வைத்த ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொண்டால் இளநீர் மில்க் ஷேக் ஆக குடிக்கலாம்.