வாய் புண்ணை விரட்ட ஆரோக்கிய வழிகள் சில…
வாய் புண் குழந்தை முதல் முதியோர் வரை எல்லோருக்கும் வரலாம். மேலும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய் புண் வரும் வாய்ப்பு அதிகம்.
அதேபோல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள், புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம்.
மணத்தக்காளியின் பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். பொரியல், சூப், அல்லது பருப்புடன் சேர்த்து சமைத்து உண்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.
கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
தினமும் மூன்று வேளை கொய்யா இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் வாய் புண் குணமாகும்.
உடல் சூட்டை தணிக்க இளநீர் அருந்தலாம். புளிப்பு சுவையுடைய தயிர் ,மோர், உணவில் சேர்த்து கொள்ளலாம். இதன் மூலம் வாய் புண்ணை தவிர்க்கலாம்.
புதினா இலையை அரைத்து அதன் சாற்றை தடவினால் வாய் புண்ணால் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் குணமாகும்.