ரத்த சோகையை குணப்படுத்தும் கருடன் சம்பா..!
கருடன் கழுகுக்கு கழுத்தில் வெள்ளை நிறம் இருப்பது போல, இந்த நெல்லின் நுனிப்பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் இருக்கும். விரைவில் வேகும் தன்மையும், ஊட்டச்சத்தும் நிறைந்தது.
கருடன் சம்பா அரிசியைத் தொடர்ந்து உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உடம்பில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் தன்மை கொண்டது.
சிறுநீரக பிரச்னைகள், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த கருடன் சம்பா அரிசிக்கு உள்ளது.
ரத்த சோகை, சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலனை அளிக்கும்.
எலும்புகளை வலுப்படுத்தும் சிறந்த அரிசி ரகம் இந்த கருடன் சம்பாவாகும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
நாம் சாப்பிடும் துரித உணவுகள் மற்றும் ரசாயனம் கலந்த உணவுகளால் தேவையற்ற கொழுப்புக் கட்டிகள் உருவாகும். இதை முற்றிலும் தடுக்கும் குணம் இந்த அரிசி ரகத்திற்கு உள்ளது.
உடல் எடை அதிகரித்துக் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடை எடையைக் குறைக்கலாம்.
இந்த அரிசியில் அனைத்து விதமான பலகாரங்கள் மற்றும் சிற்றுண்டிகள் செய்து சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.