விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பச்சரிசி தேங்காய் பாயசம்!
தேவையானவை: பச்சரிசி, தேங்காய்த் துருவல் - தலா கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்துாள் - அரை தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு, பாதாம் - சிறிதளவு நெய்யில் வறுத்து கொள்ளவும். நெய் - ஒரு தேக்கரண்டி, பால் - இரண்டு கப்.
செய்முறை: பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு, அரிசியுடன் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்த விழுதை போட்டு கட்டி இல்லாமல் கிளறிவிடவும்
தீயை குறைத்து வைத்து, நன்றாக வெந்தவுடன் வெல்லத்தை கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
இரண்டும் சேர்ந்து கொதி வந்தவுடன் பாலை ஊற்றிக் கலந்து இறக்கி, ஏலக்காய்த்துாள், நெய்யில் வறுத்த பாதாம், முந்திரிப்பருப்பை சேர்க்கவும். பாயசம் ரெடி.