உங்கள் சமையலை ருசிக்க செய்ய டிப்ஸ்.. டிப்ஸ்...
கேக் செய்யும்போது மாவு கலவையுடன் சிறிதளவு, தேன் சேர்த்துக் கொண்டால், சுவையான, மிருதுவான கேக் கிடைக்கும்.
சூப் செய்யும்போது இட்லியை சிறு துண்டுகளாக்கி, வெண்ணெயில் பொரித்துப் போட்டால் புது சுவை தரும்.
பிரட் ஸ்லைஸ்களில் சால்ட் பட்டர் அல்லது நெய் தடவி அதன்மேல், இட்லி பொடியை துாவி எண்ணெயில் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பாக இருக்கும்.
ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி, உப்பு, மிளகாய் பவுடர், வெந்தய பொடி, பெருங்காய பவுடர் கலந்து தாளித்தால் வித்தியாசமான சுவையில் ஊறுகாய் கிடைக்கும்.
குலோப்ஜாமூன் மீந்தால் அதில் மைதா மாவு சேர்த்து சப்பாத்தி போல திரட்டி, சதுர துண்டுகளாக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் பிஸ்கட் தயார்
பூசணி துருவலை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து, அல்வா செய்தால் சுவை கூடும்
பருப்புரசம் தாளிக்கும் போது ஒரு கொத்து முருங்கைக் கீரையையும் சேர்த்து தாளித்தால் ரசத்தின் சுவை கூடும்.