வயிறு உப்புசத்தை போக்கும் சுண்டைக்காய் வற்றலை வீட்டிலேயே செய்யலாம்!
சுண்டைக்காய் வற்றலை வீட்டிலேயே நாம் தயார் செய்யலாம். வயிற்றுவலி, வயிறு உப்புசம், ஏப்பம் போன்ற பிரச்சனைகளை இந்த வற்றல் சரி செய்கிறது.
முற்றின சுண்டைக்காயை நசுக்கி உப்பு கலந்த புளித்த மோரில் ஊறவைத்து, பிறகு அதனை வெயிலில் காயவைக்க வைக்கவும்.
நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து வெந்நீரில் கலந்துக் குடித்து வர வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி, சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் நீங்கும்.
இக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, சூப் செய்யலாம்.
இதை வாரம் ஒரு முறை செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் நீங்கும்.
சுண்டைக்காய் வற்றலை தொடர்ந்து சேர்த்துக்கொண்டால் ரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.