புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள் சில...

புற்றுநோய் செல்களை உடலில் வளரவிடாமல் தடுக்கும் சக்தி காய்கறிகளுக்கு உண்டு. அத்தகைய சக்தி வாய்ந்த காய்கறிகள் பற்றிய குறிப்புகள் குறித்து பார்ப்போம்.

புற்றுநோயை எதிர்க்கும் பொருள், உருளைக்கிழங்கின் தோலின் உட்பாகத்தில் இருப்பதால், அதை தோலுடன் சாப்பிட வேண்டும்.

விஞ்ஞானிகள் பாகற்காய்சாறு, மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமின்றி, புற்றுநோய் செல்களைப் பெருக்கமடையாமல் தடுக்கிறது எனக் கண்டுபிடித்துள்ளனர்.

தக்காளி நுரையீரல், வயிறு, வாய், குடல், மலக்குடல் புராஸ்டேட் உள்ளிட்ட புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.

வெங்காயத்தையும், பூண்டையும் உணவில் அதிகம் பயன்படுத்தினால், வயிற்றுப்புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு தெரிவிக்கிறது.

கணையப்புற்று, மார்பகப்புற்று, வயிற்றுப்புற்று, குடல்புற்று வராமல் முட்டைகோஸ் தடுக்கிறது. இதில் உள்ள கந்தகமும், ஹிஸ்டிடின் அமினோ அமிலமும், நோயை தடுப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வெங்காயம், காரட், வெள்ளரி, தக்காளி சாலட் சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு உணவு. பரம்பரை புற்றுநோய்கள் என்று சொல்லப்படுகின்ற தைராய்டு, கணையம் போன்ற புற்றுநோய்களையும் தடுக்கும்.