கமகம சமையலுக்கு எளிய டிப்ஸ்...
காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினீகர் கலந்த குளிர்ந்த நீரில், சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்
பாலை காய்ச்சி குளிர்சாதன பெட்டியில் வைத்தால் பாலாடை அதிகம் கிடைக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை தயாரிக்கும் போது, பொட்டுக்கடலையை வறுத்து கொட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.
தக்காளி சூப் செய்யும் போது, ஒரு சிறு துண்டு பீட்ரூட்டை டோஸ்ட் செய்து வைத்து சேர்க்கலாம். இதனால், சூப் நல்ல நிறமாக இருக்கும்
பொரியல், வறுவல் காரம் அதிகமாகிவிட்டால் ரஸ்க்கை துாள் செய்து துாவினால் காரம் குறையும்.
எலுமிச்சை பழ சர்பத் செய்யும் போது சிறிதளவு இஞ்சி சாற்றை கலந்தால், சுவையும், மணமும் கூடும்.
புளிக்குழம்பு செய்யும் போது இறுதியில் மிளகு, சீரகத்தை அரைத்து பொடியாக போட்டால் சுவை அதிகரிக்கும்.