வாதம் அதிகமாகும் காலம் இது! ஓமம் பானம் நல்ல தீர்வு!!
பருவ மழைக்காலம் மற்றும் குளிர் காலத்தில், கை, கால் வலி, மூட்டு வலி மற்றும் எலும்புகளில் வலி அதிகமாகும்.
மேலும் எலும்பு மூட்டுகளில் சேர்வதால், காலை எழுந்தவுடன், கை, கால்கள் மரத்து போவது, கால் மூட்டுகளை மடக்க சிரமப்படுவது, கைகள் இறுக்கம், கழுத்தை திரும்புவதில் சிரமம் ஏற்படலாம்.
இதற்கு வாதம் அதிகரிப்பது தான் இதற்கு காரணம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வலிகளை போக்க ஓமம் கூட்டு பானம் நல்ல பலன் தரும். பானம் செய்ய முதலில் ஓமம், கருஞ்சீரகம், சீரகம் இவற்றை வறுத்து, பொடியாக்கி கொள்ள வேண்டும்.
தினமும் காலை, மாலை, தேவையான நேரத்தில், ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கலந்து, பாதியாகும் வரை காய்ச்ச வேண்டும்.
பானம் ஆற வைத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்து குடிக்க வேண்டும்.
இதை தினமும் குடிப்பதால் குளிர் காலத்திலும் உடலுக்குத் தேவையான உஷ்ணம் முழுவதும் கிடைக்கும்.
அது மட்டுமில்லாமல் வாயுக்கள் உடம்பில் இருந்து வெளியேறத் துவங்கும். இதனால் கால் வலிகள் படிப்படியாக குறையும்.