ஹெல்த்தியான வெண்டைக்காய் சட்னி ரெசிபி

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 250 கிராம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1.5 டேபிள் ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல், புளி - சிறிதளவு, எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், வெண்டைக்காயை நன்கு வதக்கவும்.

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் புளியை தனியாக எண்ணெயில் வறுக்கவும்.

இவை சூடு ஆறியதும் தேங்காய் துருவல், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

இப்போது, சுவைமிக்க மற்றும் ஆரோக்கியமான வெண்டைக்காய் துவையல் ரெடி. சத்துக்கள் நிறைந்தது; இட்லி, தோசைக்கு, சைடு டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.