வலியை குறைக்கும் ஜாதிக்காய்… இவ்வளவு பயன்களா!!
ஜாதிக்காய் அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
ஜாதிக்காயில் வலியை குறைக்கும் திறன், அஜீரணத்தை எளிதாக்குதல், ரத்த ஓட்டம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வாய் வழி பிரச்னைகளை நீக்குதல், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் போன்ற ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன
உங்களுடைய வளர்ச்சிதை மாற்றம் பலவீனமாக இருந்தால், ஜாதிக்காயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஜாதிக்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு உடலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது.
இரைப்பை பிரச்னைகள், அசிடிட்டி, வாயு போன்ற பிரச்னைகளை தடுக்கிறது. வயிற்றுப்போக்கு பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது
சூடான ஒரு கப் பாலில், இரண்டு சிட்டிகை ஜாதிக்காய் பொடி மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.
இந்த கலவையானது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், துாக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும்.