ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீர்க்கை ஜூஸ்...!
பீர்க்கங்காய் - 1, இஞ்சி - 1 இன்ச் அளவு, எலுமிச்சை - 1/2 , கல் உப்பு - தேவைக்கேற்ப.
பீர்க்கங்காயை நார் எடுத்துவிட்டு நான்கைந்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தோல் சீவிய இஞ்சி, கல் உப்பு, பீர்க்கங்காயை மிக்சி ஜாரில் போட்டி நைசாக அரைக்கவும்.
பின் நன்றாக வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்தால் பீர்க்கை ஜூஸ் இப்போது ரெடி.
எலுமிச்சை பழத்தை தோலுடன் போட்டு ஜூஸ் அரைத்தால், இன்னும் முழு சத்துக்கள் அப்படியே கிடைக்கும். விருப்பப்பட்டால் இதனுடன் சீரகம், குருமிளகும் சிறிது சேர்த்து அரைக்கலாம்.
பீர்க்கங்காயின் இலைகள், விதைகள், வேர் என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை.
இதில், அனைத்து விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது.