சட்டென்று மாறிய வானிலை… உடல் சூட்டைத் தணிக்க ரெடியாகலாம்!
90% தண்ணீர் நிறைந்த பழம் என்பதால் தர்பூசணி உடல் நீர்ச்சத்து வற்றுவதை தடுத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.
வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி அதிகப்படியான உடல் வெப்பத்தையும் தணிக்கும்.
தயிரும் மோரும் உடல் வெப்பத்தைத் உடனடியாக தணிக்கும். இதில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது.
எலக்ட்ரோலைட்கள் இளநீரில் அதிகமாக இருப்பதால் இது சூட்டை தணிப்பதுடன், புத்துணர்ச்சியும் கொடுக்கும்.
ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி என தினம் ஒரு சிட்ரஸ் பழத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.
கற்றாழை சதையை மோரில் சேர்த்துக் குடித்தாலும் உடல் சூடு தணியும்.
நீரில் கொஞ்சம் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து குடிக்கலாம்.
தண்ணீரை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலில் சூடு குறையும்.