வெயிலுக்கேற்ற குளுகுளு நுங்கு ரோஸ்மில்க்!

6 இளசான நுங்கை சுத்தம் செய்து மிக்சியில் சிறிது பால் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

1 லிட்டர் பாலை அடுப்பில் வைத்து, சிறு தீயில் நன்றாகக் காய்ச்சி பாதியாக சுண்ட வைக்கவும்.

பின்னர் அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.

பின்னர், நுங்கு கலவையுடன், 1 டீஸ்பூன் ரோஸ் எசன்ஸ் கலந்து சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்து ஜில்லென்று பரிமாறினால் சுவையான 'நுங்கு ரோஸ்மில்க்' தயார்.