பலா விதைகளை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

பலா விதைகளை சாம்பாரில் சேர்த்தோ அல்லது பொரியலாகவோ சமைத்துச் சாப்பிடலாம்.

வயோதிகம் காரணமாக முகத்தில் உண்டாகும் சுருக்கங்களை பலா விதைகள் குறைக்கும்; சருமப் பொலிவுக்கு உதவும்.

பலா விதைகளை பொடி செய்து, அஜீரணம் ஏற்படும்போது தண்ணீரில் கலந்து குடித்தால் செரிமானக் கோளாறுகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

இதிலுள்ள மைக்ரோ நியூட்ரியன்டுகள், புரதச் சத்துகள் சரும நோய்களைத் தடுப்பதுடன், மன அழுத்தத்தைக் குறைக்கவும், கூந்தலின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இதில் வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளதால் கண் பார்வையைத் தெளிவாக்க உதவும்; மாலைக்கண் நோய் தவிர்க்க உதவுகிறது.

ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும். இரும்புச் சத்து அதிகமுள்ளதால் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

பலா விதைகளை சாப்பிடுவது மட்டுமின்றி, அரைத்து தேன் மற்றும் பாலுடன் கலந்து பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.