ஹெல்த்தியான கொள்ளு துவையல் ரெசிபி
தேவையானப் பொருட்கள்: கொள்ளு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 12, உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்.
பூண்டு - 7 பல், பெருங்காயம் - 1 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு, கடுகு, கருவேப்பிலை மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.
கொள்ளுப்பருப்பை சுத்தம் செய்து நன்றாக வறுக்கவும்.
காய்ந்த மிளகாய், பூண்டு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை தனியாக வறுக்கவும்.
இவை ஆறியவுடன், உப்பு மற்றும் கொள்ளுப்பருப்புடன் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கெட்டியாக அரைக்கவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கடுகு, கருவேப்பிலை தாளித்து, அரைத்த கலவையுடன் கலக்கவும்.
இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கொள்ளு துவையல் ரெடி. இட்லி, தோசைக்கு 'சைடு டிஷ்' ஆக சாப்பிடலாம். சுடுசோறுடன் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.