குட்டீஸ்களை அசத்தும் அன்னாசி பழ பாயாசம்

தேவையானப் பொருட்கள்: அன்னாசி பழத்துண்டு - 1 கப், பச்சரிசி - 1 கப், பாதாம், முந்திரி, நெய் - சிறிதளவு, சர்க்கரை, தண்ணீர் - தேவையானளவு.

அன்னாசி பழத்துண்டுகளை அரைத்து சாறு எடுக்கவும்.

பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி நன்றாக அரைக்கவும்.

பச்சரிசியை வறுத்து ரவை போல பொடியாக்கவும்.

பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும், அரிசி ரவையை போட்டு கிளறவும்.

வெந்தவுடன் சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் விழுது, நெய், அன்னாசி பழச்சாறு கலந்து இறக்கினால், அன்னாசி பழ பாயாசம் ரெடி.

குழந்தைகள் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.