வாழைப்பழ அல்வா ரெசிபி
தேவையானப் பொருட்கள்: வாழைப்பழம் - 8, சர்க்கரை - 1 கப், சோள மாவு - 50 கிராம், நெய், பாதாம், முந்திரி, தண்ணீர் - தேவையான அளவு.
வாழைப்பழத்தை தோல் நீக்கி மிக்சி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு சூடானவுடன் அரைத்த வாழைப்பழ விழுதை போட்டு கிளறவும். பின், சோள மாவை தண்ணீருடன் சேர்த்து கரைசலாக்கி ஊற்றவும்.
அதனுடன் சிறிது நெய் ஊற்றி, அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.
நெய்யில் வறுத்த பாதாம் முந்திரியை பொடியாக நறுக்கி அதில் தூவவும்.
இப்போது சுவையான வாழைப்பழ அல்வா ரெடி. அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.