வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க் ஷேக் !
தேவையானப் பொருட்கள்: தர்பூசணி - அரை பழம், பால் - 1/2 லி, சர்க்கரை - தேவையான அளவு, பாதாம் பிசின் - 2 டீஸ்பூன், சப்ஜா விதை - 1 டீஸ்பூன்
தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி கொள்ளவும்.
அதனுடன், காய்ச்சி ஆற வைத்த பால், பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகளை சேர்த்து நன்றாக கலக்கினால், தர்பூசணி மிலக் ஷேக் ரெடி.
இதை அரைமணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து வெயிலுக்கு இதமாக கூலாக பரிமாறலாம்.
இதில் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரியை சேர்த்தால் சுவை மேலும் அதிகரிக்கக்கூடும். குழந்தைகளும் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.
இதுபோன்ற ஜூஸ்களை வீட்டிலேயே தயார் செய்யும் போது, டேஸ்டியாக இருப்பது மட்டுமின்றி, சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.