பொங்கல் ஸ்பெஷல் பறங்கிக்காய் மொச்சை குழம்பு ரெசிபி!
தேவையான பொருட்கள்: பறங்கிக்காய் - ஒரு துண்டு, பச்சை மொச்சை பயறு உரித்தது - கால் டம்ளர்
புளி - எலுமிச்சை அளவு, வெல்லம் - சிறு துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்துாள் மற்றும் வெந்தயம் சிறிதளவு
வறுத்து அரைக்க: சிவப்பு மிளகாய் - 5, தனியா - ஒரு மேஜைக்கரண்டி, சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி, மிளகு - 10, தேங்காய் - ஒரு மூடி துருவியது
எல்லாவற்றையும் சிறிது எண்ணெயில் வறுத்து அரைத்து கொள்ளவும்.
பறங்கிக்காயை தோலோடு சதுரங்களாக அரிந்து மொச்சை சேர்த்து, போதிய தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
வெந்தபின் புளிக்கரைசல், உப்பு, வெல்லம், அரைத்த விழுது சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். இறுதியாக, கடுகு தாளித்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.