கீமோதெரபி சிகிச்சைக்கு பின், நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு அதிக வலுச்சேர்க்கும். மேலும் இழந்த எடையை கூட உதவும் என ஊட்டசத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கீமோதெரபிக்கு பின் என்னென்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து அறிந்துக்கொள்ளலாம்.
வைட்டமின் ஈ, வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் வகை பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
கால்சியம் நிறைந்த சீத்தாப்பழம், கொய்யா போன்ற பழங்களையும் எடுத்து கொள்ளலாம்.
காய்கறிகளை பொறுத்த வரை அனைத்து வகையான காய்கறிகளையும் சாப்பிடலாம்.
சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ளவது மிகவும் அவசியம். அதுவும் முழு தானியங்களை கொண்டு சமைத்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
சிக்கன், மட்டன் போன்ற அதிக புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சிறிதளவு உண்ணலாம்.
கீமோதெரபி சிகிச்சையில் இருந்து வந்தவர்கள் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.
தினமும் 7-9 மணி நேர இரவு தூக்கம் உடலுக்கு புத்துணர்வை தர உதவும்