பாஸ்பரஸ் சத்து ஏன் உடலுக்கு அவ்வளவு முக்கியம்? அறிவோமா...

பாஸ்பரஸ் என்பது நம் உடலின் ஆரோக்கியதிற்கு அத்தியாவசியமான ஒரு கனிமச்சத்து. உடலில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உற்பத்தியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது

மேலும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகள் உடலில் எலும்புகள், பற்கள், உடல் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்தும். அந்த உணவு வகைகள் குறித்து அறிந்துக்கொள்வோம்.

ஒரு நபர் தினமும் குறைந்தது 580 மி.கிராம் அளவு பாஸ்பரஸை எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.

ஒரு முட்டையை முழுவதுமாக எடுத்துகொள்ளும் போது 86 மி.கிராம் முதல் 100 மி.கிராம் அளவு பாஸ்பரஸ் கிடைக்கும். குறிப்பாக பாஸ்பரஸ் அதிக அளவில் மஞ்சள் கருவில் தான் உள்ளது.

150 கி. அளவு குறைந்த கொழுப்பு கொண்ட தயிரில் நம் உடலுக்கு தேவையான 40% பாஸ்பரஸ் கிடைக்கும்.

அதுவே 200 மில்லி அளவு பாலில் 36% பாஸ்பரஸ் சத்து கிடைத்துவிடுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

பாலில் இருந்து பெறப்படும் சீஸ்ஸில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. அதனால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.

1 கப் பீன்ஸ் வகைகளில் 200 முதல் 220 மி.கிராம் அளவு பாஸ்பரஸ் உள்ளது.

திணை போன்ற முழு தானியங்களில் அதிக அளவில் பாஸ்பரஸ் கிடைக்கும். நட்ஸ் வகைகளையும் உண்ணலாம்.

பால் சாக்லேட்டை விட டார்க் சாக்லேட்டில் அதிக அளவில் பாஸ்பரஸ் உள்ளது.