குட்டீஸ்களுக்கு பிடித்தமான சிவப்பு தினை பூரி

தினை, கோதுமை மாவு - தலா 1 கப், பீட்ரூட் - 1, உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.

பீட்ரூட்டை தோல் நீக்கி, மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும்.

இதனுடன் கோதுமை மற்றும் தினை மாவுகளை நன்கு கலக்கவும்.

அதில் உப்பு, தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.

மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, மிருதுவாக தேய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

இப்போது, கலர்புல்லான சிவப்பு தினை பூரி ரெடி. குட்டீஸ்கள் ஆர்வமுடன் சாப்பிடுவர்.