உடல் எடையை குறைக்கும் மேஜிக்கல் தேநீர்
சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாப் பொருட்கள் உணவுக்கு மனம்,
சுவையை அளிப்பதுடன், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மைகளை அள்ளித் தருகின்றன.
அதில், சைவம் மட்டுமின்றி அசைவ உணவுக்கும் பயன்படுத்தும் லவங்கப்பட்டை ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டது.
அடுப்பில்
ஒரு பாத்திரத்தை வைத்து 200 மி.லி., தண்ணீர் ஊற்றி, 3 இன்ச் பட்டையை
சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின், அடுப்பை சிம்மில் வைத்து தண்ணீரை
பாதியாக வற்ற விடவும்.
ஆறியவுடன் வடிகட்டி 1 டீஸ்பூன் தேன் சேர்த்தால் பட்டை தேநீர் ரெடி. மிதமான சூட்டில் இருக்கும்போது மட்டுமே தேன் சேர்க்க வேண்டும். லவங்கப்பட்டை தூள் என்றால் 1/ 2 டீஸ்பூன் சேர்க்கலாம்.
காலையில் வெறும் வயிற்றிலும், இரவு தூங்கும் முன்பும் இதை
குடித்து வர உடல் எடையை சீராகக் குறைக்கலாம். உடலிலுள்ள கெட்ட கழிவுகளை
வெளியேற்றி சுத்தப்படுத்தும் இந்த மேஜிக்கல் தேநீர்.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால், இதயம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது; வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது; தேவையில்லாத கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது.
இதிலுள்ள
பாலிபினால் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக்
கட்டுப்பாட்டில் வைத்து டைப் 2 நீரிழிவு பிரச்னை வராமல் தடுக்கிறது.