காலை உணவாக வாழைப்பழ வால்நட் ஸ்மூத்தி நல்ல சாய்ஸ்!

வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் அதிக அளவிலான ஒமேகா 3 பேட்டி ஆசிட் , ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன.

வயதானால் வரும் அல்சைமர் நோய் வராமல் காப்பதில் வால் நட் பெரும்பங்கு வகிக்கின்றது. நரம்பு சம்பந்தபட்ட நோய்களை தடுக்கிறது.

காலை உணவு லைட்டா இருக்கணும்னா வாழைப்பழ வால்நட் ஸ்மூத்தி நல்ல தேர்வு.

இது உங்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது. ஆளி விதை, சியா விதை போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதெல்லாம் தேவை : 1 கப் குறைந்த கொழுப்பு தயிர், 1/2 வாழைப்பழம், 3-4 வால் நட், 1 தேக்கரண்டி ஆளி, சியா விதைகளின் கலவை, தேன் தேவைக்கேற்ப.

முதல் நாள் இரவில் வால் நட், ஆளி, சியா விதைகளை ஒரு கின்னத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

காலையில் ஒரு மிக்ஸ் ஜாரில் தயிர், ஆளி விதை, சியா விதைகள், வால்நட்கள், தேன் மற்றும் வாழைப் பழத்தை நறுக்கி போடவும்.

மிருதுவாகவும் கிரீமியாகவும் வரும் வரை நன்கு அரைக்கவும். பரிமாறும் முன் ஒரு கிளாஸில் ஊற்றி , நறுக்கிய வால்நட்ஸை அதன் மேல் தூவவும். வாழைப்பழ வால்நட் ஸ்மூத்தி ரெடி.