அஜீரணத்தை போக்கும் புதினா ரசம்!

புதினாவில் நீர்ச்சத்து, நார்ச்சத்து,கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், புரதம், கொழுப்பு, வைட்டமின் ஏ போன்றவை உள்ளன.

அஜீரணத்தை போக்கவும், ரத்தம் சுத்தமாக்கவும், மலச்சிக்கல் நீங்கவும் புதினா பெரிதும் உதவும். இதில் எப்படி ரசம் செய்வது என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: புதினா இலை - 20, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு

பூண்டு, காய்ந்த மிளகாய் - 2, புளி, சீரகம், மிளகு, உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை : புளியை, தண்ணீரில் கரைத்து கசடு நீக்கி வடிகட்டவும்.

மிளகு, சீரகம், பூண்டு, புதினா இலையை நன்கு அரைத்து, அதில் போட்டு கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்த பின் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாயை, எண்ணெயில் தாளித்து கொட்டவும்.

சூடான, 'புதினா ரசம்' தயார். சுடுசாதத்தில் ஊற்றி சாப்பிட சுவை அள்ளும். அனைத்து வயதினரும் விரும்புவர்.