மணத்தக்காளி கீரை மசியல் ரெசிபி
தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை - 1 கட்டு, பயத்தம் பருப்பு - 75 கிராம், பச்சை மிளகாய் - 2, சீரகம், அரிசி - தலா 1 தேக்கரண்டி.
தக்காளி - 150 கிராம், தேங்காய் துருவல் - 1 கப், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்துாள், கடுகு, தண்ணீர் - தேவையான அளவு.
பயத்தம் பருப்பை, தண்ணீரில் வேக வைக்கவும். பாதி வெந்ததும், பொடியாக நறுக்கிய மணத்தக்காளி கீரையை போடவும். பின், துண்டுகளாக்கிய தக்காளி, தேவையான உப்பு சேர்க்கவும்.
இந்த கலவை வெந்ததும், தேங்காய் துருவல், சீரகம், அரிசி, பச்சை மிளகாயை அரைத்து சேர்த்து கொதிக்க விடவும்.
இறக்கியதும், பெருங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டினால், சுவையான மற்றும் சத்தான 'மணத்தக்காளி கீரை மசியல்' ரெடி.
கெட்டியாக கூட்டு போல் இருக்கும். சாதத்தில் நெய்யுடன் சேர்த்து பிசைந்து சூடாக சாப்பிடலாம்.
வாய்ப்புண், வயிற்றுப்புணணுக்கு இது நிவாரணம் தரும்.