காலையில் எழுந்தவுடன் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்கள் !
தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும்.
தண்ணீர் அசிடிட்டியை குறைக்கும் தன்மை கொண்டது. வெறும்வயிற்றில் குடித்தால் அமிலத்தின் வீரியத்தை சரிசெய்து, வயிற்றை பாதுகாக்க உதவுகிறது.
தினமும் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் ரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல், நீழிரிவு, அல்சர், ஹார்ட் அட்டாக், சிறுநீரகக் கோளாறு, உடல்பருமன் உட்பட பல்வேறு பாதிப்புகள் கட்டுப்படக்கூடும்.
முதல் நாள் இரவில் சிறிது வெந்தயத்தை ஊறவைத்து, அந்த தண்ணீரை காலையில் குடிக்க நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.
கொத்தமல்லி விதைகள் (தனியா) ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால், தைராய்டு பாதிப்பை தவிர்க்கலாம்.
ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் சீரகம் ஊறவைத்த தண்ணீரை குடித்து வர அசிடிட்டி, வயிற்று உப்புசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
சீரற்ற மாதவிடாய் பிரச்னைக்கு எட்டு உலர் திராட்சைகளை ஊறவைத்து, அந்த தண்ணீரை காலையில் குடித்து வர தீர்வு கிடைக்கும்.