இதய நலம் காக்கும் முந்திரி... பயன்கள் அறிவோமா!

முந்திரி சாப்பிட்டால், உடல் நலம் கெடும் என்பது உண்மை அல்ல; அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கேடு தரும்.

முந்திரிப் பருப்பில் குறைந்த கொழுப்பே இருக்கிறது. இதய நலம் காக்கும், 'ஒலிசிக்' என்ற அமிலம், முந்திரியில் உள்ளது.

மாரடைப்பு நோய் ஏற்பட முக்கிய காரணம் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதே ஆகும்.

அதிக அளவு மெக்னீஷியம் சத்து உள்ளதால், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

எலும்பு தேய்மான பிரச்னையையும் தீர்க்கும். காப்பர் சத்து உள்ளதால், மூட்டு வலியையும் தீர்க்கும். மேலும் தலை முடி வளர உதவும்.

நல்ல கொழுப்பு அதிகம் உள்ளதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும்.

மாதவிடாய் காலத்தில் வலியால் பெண்கள் அவதிப்படுவர். துாக்கம் இன்றி தவிப்பர். முந்திரிப்பருப்பை உண்டு வந்தால், இந்த வலி தீரும்.