காலையில் செவ்வாழை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதுவும் காலையில் முதல் உணவாக ஒரு செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் நன்கு மென்று உண்டால் ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்பு பாதிக்கு மேல் கிடைக்குமாம்.

காலை உண்ணவில்லை என்றால் பகல் 11 மணி நேரத்திலோ, மாலை 4 மணி ஸ்நாக்ஸ் நேரத்திலோ உண்ணலாம்.

காரணம் உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், அதன் முழு சத்துகளும் கிடைக்காமல் போகும்.

இதில் பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் என பல சத்துக்கள் உள்ளன.

குறிப்பாக கண் பிரச்னைக்கு தீர்வு தரும் நியூட்டின், ஸியான்தினின், பீட்டா கரோட்டின், வைட்டமின் 'ஏ' ஆகிய சத்துக்கள் செவ்வாழையில் அதிகம் உள்ளது.

மேலும் காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.

தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் கைகால் நடுக்கம், மரத்துப்போதல் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பலவீனங்கள் மேம்ப்படும்.