நவராத்திரி சுண்டலை சூப்பராக்க டிப்ஸ்.. டிப்ஸ்...
பச்சைப்பயறு மற்றும் காராமணி சுண்டல்களுக்கு, வெல்லம் மற்றும் தேங்காய்த் துருவலும், கொண்டைக் கடலைக்கு காரப்பொடியும் சேர்த்தால், அலாதியான ருசி இருக்கும்.
சுண்டல் வகைகளை வேக வைக்கும் போது, உப்பு சேர்த்தால், 'நறுக் நறுக்' என்று இருக்கும். சுண்டலை அடுப்பில் இருந்து, கீழே இறக்குவதற்கு முன், தூள் உப்பை போட்டால்'மெத் மெத்'தென்று இருக்கும்.
வெந்த சோயா பீன்சுடன், வதக்கிய குடை மிளகாய் மற்றும் துருவிய, 'சீஸ்' சேர்த்தால், குழந்தைகளுக்கு பிடித்த சுண்டல் தயார்!
வேக வைத்து, உதிர்த்த மக்காச் சோளத்தில், சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்தால், வித்தியாசமான சுண்டல் ரெடி!
எந்த வகை சுண்டல் செய்தாலும், மேல் தோல் வெடிக்கும் வரை வெந்திருந்தால், சாப்பிடுவோருக்கு அஜீரணம் வராது.
சங்கு மக்ரோணியை வேக வைத்து தாளித்து, வறுத்த எள் பொடியை தூவினால், மாடர்ன் சுண்டல் தயார்!