சுக்கு மிஞ்சிய மருந்து இல்லை!! அதன் ஆரோக்கிய பலன்கள் இதோ!
இஞ்சியை நன்றாகக் காயவைத்த பின்னர், அதில் உள்ள நீர் வற்றிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. சுக்கு எளிதில் கெடாது.
குழந்தைகளுக்கு வயிறு மந்தமாக இருந்தால் சிறிதளவு சுக்கை அரைத்து அவர்களுக்குக் கொடுக்கலாம். சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.
அல்சரை சரிசெய்ய, கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து தினமும் காலையில் எழுந்ததும் குடிப்பது நல்லது.
சுக்கு தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால், இருமல் தொல்லையிலிருந்து விடுபட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
உடல் எடையைக் குறைக்க ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து தினமும் குடிக்கலாம்.
அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து தொப்பையின் அளவை குறைத்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வெதுவெதுப்பான பாலில் சுக்குப் பொடியை சேர்த்து, அதில் நாட்டுச் சர்க்கரைக் கலந்து குடித்துவந்தால் சிறுநீரக நோய்த் தொற்று குணமாகும். சிறுநீர் பாதை தொற்றுகளை நீக்கும் இயற்கை வைத்தியம்.
தலையில் நீர் கோர்த்து இருந்தால், சுக்கை உரசி அதில் சிறிதளவு பெருங்காயத் தூளை சேர்த்து தலையில் தடவினால் சிறிது நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.