வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இவற்றைப் பயன்படுத்தலாமே
வெள்ளை சர்க்கரையை தொடர்ந்து அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் வெற்று கலோரிகள் அதிகரித்து உடற்பருமனுக்கு வழிவகுக்கிறது.
சர்க்கரைக்கு
மாற்றாக வேறு சில ஆரோக்கியமான இனிப்பு பொருட்களை பயன்படுத்தலாம்
என்கின்றனர் நீரிழிவு நிபுணர்கள். அவை என்னென்ன எனப் பார்ப்போம்.
தென்
மாநிலங்களில் அதிகளவு இயற்கை முறையில் கரும்பில் இருந்து உற்பத்தி
செய்யப்படும் நாட்டுச் சர்க்கரையை டீ, காபி உள்ளிட்டவற்றில்
பயன்படுத்தலாம்.
தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் தேங்காய் சர்க்கரையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.
பேரிச்சம்பழத்தை அதீத வெப்பத்தில் சுடவைத்து, பொடியாக்கி
உலர்த்தினால் கிடைப்பது பேரிச்சை சர்க்கரை. உடலில் கொலஸ்ட்ரால் அளவை
கட்டுக்குள் வைக்க இது உதவுகிறது.
மீட்டி துல்சி (இனிப்பு துளசி) என்ற ஸ்டிவியா இலைகள் ஆயுர்வேத மருந்துகளில் கலக்கப்படும். இவற்றை அரைத்து பொடியாக்கி சூடான பானங்களில் கலந்து குடிக்கலாம்.
இயற்கையாக கிடைக்கும் தேன் காலாகாலமாக முக்கியத்துவம்
வாய்ந்தது. இதை பாலில் கலந்து குடித்து வர உடல் எடை சீராகும். இதய
ஆரோக்கியம் மேம்படும்.