முளைகட்டிய வெந்தயத்தில் இத்தனை நன்மைகளா… உடலுக்கு அவ்வளவு நல்லது!

முளைகட்டிய வெந்தயத்தில் விட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ், டயோஸ்ஜெனினும் போன்றவை அதிகம் உள்ளன.

முளைகட்ட வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்து, 8 மணி நேரத்திற்குப் பின்னர் அதனைப் பார்த்தால் நன்கு முளைகட்டியிருக்கும்.

வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரிக்கும் அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

முளைத்த வெந்தயத்தில் பிளவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் போன்றவை உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.

இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து சமநிலைப்படுத்துகிறது. இதனால் இதயக்கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

வெந்தயத்தை முளைகட்டி சாப்பிட பிடிக்காதவர்கள், அதை நன்கு வறுத்து அரைத்து வெந்தயப் பொடியாக மாற்றி பால் அல்லது தேனில் கலந்து உண்ணலாம்.

வெந்தயம் குளிர்ச்சியானது என்பதால் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இடைவெளிவிட்டு எடுத்துக்கொள்ளவும்.