கரும்பு சாப்பிட்டவுடன் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது ?

ஆயுதபூஜை மற்றும் பொங்கல் நேரத்தில் பலரும் கரும்பு சாப்பிட்டு விட்டு நாக்கில் புண் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.

பொதுவாக கரும்பு சாப்பிட்டதும் 15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது தவறான ஒன்றாகும்.

கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படும் கால்சியம் அதிகமுள்ளது. இந்த சுண்ணாம்பும், எச்சிலும் இணைந்து வேதி வினையாற்றுகிறது.

அந்த சமயத்தில் தண்ணீர் குடித்தால் அதிகமான சூட்டை கிளப்பும்; வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும்; சிறு கொப்புளங்கள் தோன்றும்; நாக்கு புண்ணாகும்.

எனவே, கரும்பு சாப்பிட்டவுடன் சிறிது இடைவெளி விட்டு தண்ணீர் குடித்தால் இந்த பாதிப்பு எதுவும் வராது.

கரும்பில் அதிகளவில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் இருப்பதால் வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.

பொட்டாசியம் சத்தும் இருப்பதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். செரிமான பிரச்னையை சரி செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் கரும்பு சாறு குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்பது டாக்டர்களின் அட்வைஸ்.