சருமத்துக்கு சிறந்த டானிக் வெள்ளரி!
வெள்ளரிக்காயில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், பச்சையாக சாலட் போல சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
இதில் அதிகளவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் இருப்பதால் ஸ்பா மற்றும் அழகு சாதன நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதில் சருமம் இயல்பாகவே பொலிவுடன் காணப்படும். ஆனால் வயது ஏறஏற சருமத்தில் சுருக்கம் வரத்துவங்கும். இதற்கு உடம்பில் நீர்ச்சரத்து குறைவதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
எனவே, நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய்களை அடிக்கடி சாப்பிட சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது; சருமம் இளமை தோற்றத்துடன் காணப்படும்.
வெள்ளரிக்காயில் 90 சதவீததிற்கும் மேலாக நீர்ச்சத்து உள்ளது. எனவே தினமும் சாப்பிட, உடலில் தேவையில்லாத நச்சுகள் நீங்கி, சருமம் மெருகேறும்.
இதை சருமத்தில் பயன்படுத்தும்போது பருக்கள், ப்ளாக்ஹெட்ஸ், சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் கண்கள் சோர்வாகவும், கருவளையத்தால் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம்.
எனவே, அவ்வப்போது வெள்ளரி பேஸ் பேக், பேசியல் மாஸ்க் என் முயற்சிக்கலாம்.