உடல், மனதுக்கு புத்துணர்வு தரும் இந்துப்பு!!
இந்துப்பை பயன்படுத்தும்போது அது பித்தத்தை மட்டுமின்றி கபத்தையும் சமன்செய்து, சளி, இருமல், சைனஸ் வராமல் காக்கின்றன.
குளிக்கும் முன், இந்துப்பை உடலில் தேய்த்து சற்றுநேரம் கழித்து குளித்துவர, உடல் அசதி நீங்கி, மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.
இந்த உப்பை கொண்டு வாய் கொப்பளிக்கும் போது பல் ஈறுகள் பிரச்னை இருந்தாலும், வாய் புண் இருந்தாலும் குணமடையும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
மனச்சோர்வு நீக்கும் தன்மைமிக்கது.
உடலில் நீர் சத்தையும் தக்கவைக்கிறது.
ஜீரண சக்தியையும் அதிகரிக்கின்றன.
கண்களை காக்கும் ஆற்றல் உண்டு.