கேரட் பாயசம் ரெசிபி
தேவையானப் பொருட்கள்: கேரட் - 500 கிராம், பால் - 1
லிட்டர், சர்க்கரை - 500 கிராம், முந்திரி - 100 கிராம், திராட்சை - 100
கிராம், நெய், ஏலக்காய் பொடி, தண்ணீர் - தேவையான அளவு.
பாலில் தேவையானளவு தண்ணீர் கலந்து சூடாக்கவும்.
அதில் துருவிய கேரட், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீரில் ஊற வைத்த முந்திரியை அரைத்து அதனுடன் சேர்க்கவும்.
பின், நெய்யில் வறுத்த திரட்சையை போடவும். நன்கு கொதித்ததும் ஏலக்காய் பொடி துாவி இறக்கவும்.
இப்போது சுவையான கேரட் பாயசம் ரெடி. அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.