பன் தோசை... மாலை நேர சிற்றுண்டி இது !

ஒரு கப் ரவையை தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயில் சிறிதளவு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு மற்றும் இஞ்சி ஆகியவற்றை லேசாக வறுத்து ஆறியவுடன், கேரட் துருவல் சேர்த்து மிக்சி ஜாரில் நன்றாக அரைக்கவும்.

அகலமான பாத்திரத்தில் ஊற வைத்த ரவை மற்றும் தயிர் சேர்த்து கலக்கவும். பின், அரைத்த கலவையையும் சேர்த்து கலக்கி ஒரு மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.

அப்போதுதான் தோசை மிருதுவாக இருக்கக்கூடும்.

ஒருவேளை அவசரமாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் மாவு கலந்தவுடனேயே தோசையை ஊற்றிக் கொள்ளலாம்.

ஆனால், தோசைக்கல்லுக்கு பதிலாக, குழியான தாளிப்பு கரண்டியில் ஒரு கரண்டி அளவுக்கு மாவு ஊற்றிக் கொள்ளவும்.

கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுத்தால், இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான பன் தோசை ரெடி.

மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுத்தால் ஆர்வமுடன் சாப்பிடுவர்.